Jul 31, 2026
Thisaigal NewsYouTube
பத்து லட்சம் வெள்ளியை கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

பத்து லட்சம் வெள்ளியை கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டு

Share:

சீன வர்த்தகர் ஒருவரின் ஆடம்பர வீட்டில் நுழைந்து, சுமார் பத்து லட்சம் வெள்ளியை கொள்ளையடித்ததாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆரெம்-மின் இரண்டு அதிகாரிகளும், அந்த ஆணையத்தின் முன்னாள் அதிகாரி ஒருவரும் பெட்டாலிங் ஜெயா, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.

33 வயது முஹமாட் ஹஃபிஸ் முஹமாட் ரட்சி , 41 வயது முஹமாட் ஃபஹ்மி முஹமாட் நோர், 38 வயது அஸ்வான் அஸ்லி என்ற அந்த மூன்று அதிகாரிகளும் இரு வெவ்வேறு செஷன்ஸ் நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன.

எஸ்பிஆரெம்மின் இரண்டு அதிகாரிகளும், ஒரு முன்னாள் அதிகாரியும் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி நள்ளிரவு கோலாலம்பூர, ஜாலான் அம்பாங்கில் உள்ள சீன நாட்டைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் வீட்டில் நுழைந்து ரொக்கப்பணத்தை கொள்ளையிட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News