Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மூன்று முதிர்நிலை மருத்துவர்கள் கைது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூன்று முதிர்நிலை மருத்துவர்கள் கைது

ஜார்ஜ் டவுன் , செப்டம்பர் 03-

முடத்தன்மை தொடர்பில் சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவிடமிருந்து சந்தாதாரர்களுக்கு அனுகூலத்தைப் பெற்றுத் தருவதற்காக போலியான சான்றிதழை வழங்கி சொக்சோவை ஏமாற்றிய பெரும் ஊழலில் பினாங்கு அரசு பெரிய மருத்துவமனைகளின் மூன்று மூத்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுட்டுள்ளனர்.

சொக்கோவிடமிருந்து இழப்பீட்டுத்தொகையை பெற்றுத் தருவது, சொக்சோவிடமிருந்து மாதாந்திர ஊதிய அனுகூலத்தைப் பெற்றுத் தருவது உள்ளிட்டு சொக்சோ சந்தாதாரர்கள் சம்பந்தப்பட்ட விவகாங்களில் போலீயான சான்றதழ்கள் வழங்கப்பட்டது தொடர்பில் அந்த மூன்று டாக்டர்களையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்துள்ளது.

இன்று காலையில் பினாங்கு SPRM அலுவலகத்தில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட செபராங் ஜெயா அரசு மருத்துவமனையைச் சேர்ந்த இரண்டு மருத்துவர்களும், புக்கிட் மெர்தாஜாமைச் சேர்ந்த ஒரு மருத்துவரும் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டதாக SPRM வட்டாரங்கள் தெரவித்தன.

தங்களுடன் இணைந்து பணியாற்றும் மருத்துவர்களின் உதவியுடன் பொய்யான ஆவணங்களை தயார் செய்து, இந்த மூன்று மருத்துவர்களும் சொக்சோவில் சமர்ப்பித்துள்ளனர்.

வேலை செய்யக்கூடிய ஆற்றல் கொண்ட சொக்சோ சந்தாதார்களை வேலை செய்ய இயலாத முடத்தன்மை பட்டியலில் சேர்நது அவர்கள் சொக்சோ பணத்தை கோருவதற்கு ஏதுவாக போலி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த ஊழல் தொடர்பில் மேலும் பல மருத்துவர்கள் பிடிபடக்கூடிய சாத்தியம் இருப்பதாக நம்பப்படுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →