மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் முன்னாள் தலைவரும், மனித உரிமை போராட்ட வாதியுமான அம்பிகா சீனிவாசனுக்கு, அனைத்துலக ரூத் பேடர் கின்ஸ்பர்க் எனும் உயரிய விருதை ஸ்பேயின் நாட்டு மன்னர் பெலிப்பே வழங்கி சிறப்பு செய்துள்ளார்.
ஸ்பேயின் தலைநகர் மேட்ரீட்டில் நேற்று இரவு நடைபெற்ற மாபெரும் விருதளிப்பு சடங்கில் அந்நாட்டின் மன்னர் பெலிப்பே, இவ்விருதை வழங்கி அம்பிகா சீனிவாசனை கெளரவித்துள்ளார்.
உலக நீதிபதிகள் அமைப்பினால், இந்த உயரிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 5 பெண்களில், மலேசியாவைச் சேர்ந்த அம்பிகா சீனிவாசனும் ஒருவராவார்.
கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி கொண்டாடப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உலக மகளீர் தினத்தையொட்டி தலைச்சிறந்த 5 பெண்களுக்கு, ஸ்பேயின் மன்னர் இவ்விருதை வழங்கி சிறப்பு செய்துள்ளார்.
பிரிட்டனின் முதலாவது பெண் தலைமை நீதிபதியான பிரென்டா ஹேல், ஃபிஜி நாட்டின் முன்னாள் மனித உரிமை போராட்டவாதியான இம்ரானா ஜலால், ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசிபா ககார் மற்றும் ருவான்டா குற்றவியல் அனைத்துலக விசாரனை நடுவர் மன்றத்தின் முன்னாள் தலைவர் தென் ஆப்பிரிக்காவைச் நவி பிள்ளை ஆகியோர் விருது பெற்ற இதர நான்கு தலைச்சிறந்த பெண்கள் ஆவர்.
மலேசியாவின் தேர்தல் சுதந்திரமாக நடைபெற வேண்டும் என்பதற்காக பெர்சே இயக்கத்தின் தலைவர் என்ற முறையில், முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் , பெண்கள் சமத்துவம் மற்றும் மனித உரிமை ஆகியவற்றுக்காக போராடிய துணிச்சல் மிகுந்த பெண் என்ற அடிப்படையில், 67 வயதான அம்பிகாவிற்கு இந்த அனைத்துலக உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


