கோலாலம்பூர், அக்டோபர்.24-
கம்போடியாவில் மனிதக் கடத்தல் கும்பலால் தினமும் மின்சாரம் தாக்கி சித்ரவதை செய்யப்பட்ட 33 வயதான மலேசியப் பெண் ஒருவர் மீட்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை மலேசியாவுக்கு திரும்பவுள்ளார்.
ஓங் என அடையாளம் காணப்பட்ட அப்பெண், கிள்ளான் பகுதியில் உள்ள ஒரு லாஜிஸ்டிக் நிறுவனத்தில் ஒரு வருடத்துக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அந்நிறுவனம் நிதி பிரச்சனையால் சீனாவுக்கு மாற்றப்படுவதாகக் கூறிய நிர்வாகம், கம்போடியா வழியாகப் பயணம் செய்யுமாறு அப்பெண்ணிடம் கூறியிருக்கிறது.
ஆனால் கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி அவர் மனிதக் கடத்தல் கும்பலிடம் விற்கப்பட்டதாக மலேசிய மனிதநேய அமைப்பின் பொதுச் செயலாளர் டத்தோ ஹிஷாமுடின் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
மனிதக் கடத்தல் கும்பலை எதிர்த்து நடவடிக்கை எடுக்க, கம்போடியா அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்ட மலேசிய மனிதநேய அமைப்பு, அப்பெண்ணைப் பாதுகாப்பாக மீட்டுள்ளது.








