Jun 30, 2026
Thisaigal NewsYouTube
ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை
தற்போதைய செய்திகள்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

Share:

இவ்வாண்டு ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு, சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்குத் தற்காலிக ஓட்டத் தடைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த தடைகளானது, இன்று மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும், மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளிலும் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை சீராக வைத்திருக்கவும், விபத்து அபாயத்தை குறைக்கவும், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாகவும், சுமூகமாகவும் பயணம் செய்ய உதவுவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.

மேலும், போக்குவரத்தானது சீராகவும், அவசரத் தேவைகள் பாதிக்காத வகையிலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளையில், பொதுமக்கள் தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு, விதிமுறைகளை பின்பற்றுமாறும் அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்... | Thisaigal News