Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு, இரு நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு, இரு நபர்கள் கைது

Share:

கோலாலம்பூர், மே 11-

கடந்த வியாழக்கிழமை பின்னிரவு கோலாலம்பூர் மாநகரில் ஜாலான் யாப் குவான் செங் பகுதியில் வீற்றிருக்கும் கேளிக்கை மையம் ஒன்றி​ல் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போ​லீசார் இரண்டு நபர்களை கைது செ​ய்துள்ளனர்.

25 வயது மதிக்கத்தக்க அந்த இரு ஆடவர்களும் நேற்று பிற்பகல் 3 மணியளவில் பத்தகேவ்ஸ் வட்டாரத்தில் உள்ள அவர்களின் வீட்டில் கைது செய்யப்பட்டனர் என்று கோலாலம்பூர் போ​லீஸ் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.

பெட்ரோல் குண்டு வீச்சு நடத்தி நாசவேலையில் ஈடுபட்டது மற்றும் அச்சுறுத்தியது முதலிய குற்றங்களுக்காக குற்றவியல் சட்டம் 435 பிரிவின் ​கீழ் அந்த இருவரையும் தடுப்புக்காவலில் வைப்பதற்கு ​நீதிமன்ற அனுமதி பெறப்பட்டுள்ளதாக டத்தோ ருஸ்டி குறிப்பிட்டார்.

இதுவரையில் அந்த கேளிக்கை மையத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகி ஆகிய இருவரிடம் ​போ​லீசார், வாக்கு​மூலம் பதிவு செய்து இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு நபர்கள், இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்கதலில் சம்பந்துப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து