கோலாலம்பூர், செப்டம்பர்.08-
இளைய தலைமுறையினரிடம் தேச பக்தியையும், நாட்டின் மீதான அன்பையும் வளர்ப்பதற்கு, அவர்களுக்கு மலேசிய வரலாறு பற்றிய புரிதல் அவசியமென பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், மலேசிய வரலாறு குறித்த புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த அதீத முயற்சிகள் எடுக்கப்பட வேண்டுமென்றும், சுவாரசியமான முறையில் அவர்களுக்கு மலேசிய வரலாறு கற்பிக்கப்பட வேண்டுமென்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவை நோக்கி மலேசியா முன்னேறிச் செல்வதை ஏற்றுக் கொண்ட அவர், இளம் தலைமுறையினர் சரியான பாதையில் செல்வதை உறுதிச் செய்வதற்கு வரலாற்று அறிவு என்பது மிக முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.








