Sep 12, 2026
Thisaigal NewsYouTube
கங்கார் ஆலய இடிப்பு விவகாரம்: எதிர்ப்பு பேரணியை தாம் ஏற்பாடு செய்யவில்லை என ஆர்எஸ்என் ராயர் திட்டவட்ட மறுப்பு
தற்போதைய செய்திகள்

கங்கார் ஆலய இடிப்பு விவகாரம்: எதிர்ப்பு பேரணியை தாம் ஏற்பாடு செய்யவில்லை என ஆர்எஸ்என் ராயர் திட்டவட்ட மறுப்பு

Share:

பெர்லிஸ் மாநிலம் கங்கார்-இல் இந்து ஆலயம் ஒன்று அண்மையில் இடிக்கப்பட்டது தொடர்பாக வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பேரணியை தாம் ஏற்பாடு செய்யவோ அல்லது விளம்பரப்படுத்தவோ இல்லை என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவரான ராயர், சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் பரிமாற்ற தளங்களில் பரவி வரும் அப்பேரணி குறித்த சுவரொட்டியில் தனது பெயர், புகைப்படம் மற்றும் பதவியானது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், அந்தச் சுவரொட்டியில் “பெர்ஹிம்புனான் மேரா மகா காளி” என்ற பெயரில் பேரணி நடைபெறவுள்ளதாகவும், கோயில் பாதுகாப்புச் செயற்குழு மற்றும் மலேசிய இந்து ஆகமம் அணி ஆகியவை ஏற்பாட்டாளர்களாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தாம் உட்பட அருண் துரைசாமி மற்றும் மனித உரிமை வழக்கறிஞர் சித்தி காசிம் ஆகியோர் அதில் பேச்சாளர்களாக இடம்பெற்றுள்ளதாகவும் ராயர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமது பெயரை அனுமதியின்றி பயன்படுத்தியவர்கள் அந்த விளம்பரங்களை உடனடியாகத் திரும்பப் பெற்று, அதன் பரவலை நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி, பெர்லிஸ், புக்கிட் லாகியில் உள்ள வீரமாகாளியம்மன் ஆலயமானது அரசாங்க நிலத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்ததாகக் கூறி அதிகாரிகளால் இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு? 2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி