Sep 7, 2026
Thisaigal NewsYouTube
ராஜ நாகம் கடித்ததில் 39 வயது அதிகாரி உயிரிழப்பு – பாதுகாப்பு நடைமுறைகள் மீளாய்வு
தற்போதைய செய்திகள்

ராஜ நாகம் கடித்ததில் 39 வயது அதிகாரி உயிரிழப்பு – பாதுகாப்பு நடைமுறைகள் மீளாய்வு

Share:

பகாங் மாநிலம் தெமர்லோவில் நடந்த விஷப்பாம்புகளை கையாள்வது தொடர்பான பயிற்சியின் போது, ராஜ நாகம் ஒன்று கடித்ததில் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை, மலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புப் படையான எ.பி.எம் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது.

பயிற்சியின் போது வலது கை விரலில் ராஜ நாகம் கடித்ததைத் தொடர்ந்து, 39 வயதான சார்ஜென்ட் முகமது முவாசம் ஷா கமார்டின் உடனடியாக சுல்தான் ஹாஜி அகமது ஷா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

என்றாலும், சிகிச்சை பலனின்றி, கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி அதிகாலை அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள், அபாய மேலாண்மை மற்றும் பயிற்சி நடவடிக்கைகளை அவ்வப்போது மீளாய்வு செய்து மேம்படுத்த தயாராக இருப்பதாக எ.பி.எம் தெரிவித்துள்ளது.

கடந்த 2010 முதல் எ.பி.எம்-ல் பணியாற்றி வந்த அந்த அதிகாரி, விஷ உயிரினங்களைக் கையாள்வதில் பயிற்சியும் நீண்ட அனுபவமும் பெற்றவர் என்றும் எ.பி.எம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இச்சம்பவத்தில் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதையும் எ.பி.எம் உறுதிப்படுத்தியுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து