Dec 2, 2025
Thisaigal NewsYouTube
பிரபல அரசியல் வாதி மகனிடம் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை
தற்போதைய செய்திகள்

பிரபல அரசியல் வாதி மகனிடம் எஸ்.பி.ஆர்.எம். விசாரணை

Share:

லஞ்ச ஊழல் தொடர்பில், மற்றொரு அரசியல் பெரும் புள்ளியின் மகன், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். விசாரணை வளையத்திற்குள் இழுக்கப்பட்டுள்ளார். ஒரு வர்த்தகரான அந்த பிரபல அரசியல் வாதியின் மகன் பல கேள்விகளுக்கு இடமான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

புத்ராஜெயாவில் உள்ள எஸ்.பி.ஆர்.எம். தலைமையகத்திற்கு நேற்று அழைக்கப்பட்ட அந்த அரசியல் வாதியின் மகனிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாக எஸ்.பி.ஆர்.எம். வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்த வர்த்தகரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டு பல கேள்விகள் முன்வைக்கப்பட்ட போதிலும், அதிகமான தகவல்களைப் பெறமுடியவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
சம்பந்தப்பட்ட வர்த்தகரின் பெயர் வெளிநாட்டில் கோடிக்கணக்கான வெள்ளியைச் சட்ட விரோதமாக முதலீடு செய்துள்ள நபர்களின் பெயர்களை அம்பலப்படுத்தியிருக்கும் பனாமா பேப்பார்ஸ் ஆவணத்தில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Related News