Oct 16, 2026
Thisaigal NewsYouTube

தொழில் அதிபரை கைது செய்வதில் சிங்கப்பூருக்கு உதவியது எஸ்.பி.ஆர்.எம்.

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தொழில் அதிபரை கைது செய்வதில் சிங்கப்பூருக்கு உதவியது எஸ்.பி.ஆர்.எம்.

புத்ராஜெயா, டிச. 4-


பிரபலம் சார்ந்த வழக்கில் 19 ஆண்டுகளுக்கு முன்பு தப்பியோடி விட்ட தொழில் அதிபர் ஒருவரை கைது செய்து, சிங்கப்பூரிடம் ஒப்படைப்பதில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் உதவியுள்ளது.

லஞ்ச ஊழல் தொடர்பில் சிங்கப்பூரின் லஞ்ச ஒழிப்பு விசாரணைப் பிரிவால் தேடப்பட்டு வந்த அந்த செல்வந்தரை கைது செய்வதில் எஸ்.பி.ஆர்.எம். முக்கியப் பங்காற்றியிருப்பதாக அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

அந்த நபரை கைது செய்வதற்கு முன்னதாக அவரின் புகைப்படம் உட்பட முக்கிய ஆவணங்களை சிங்கப்பூர் லஞ்ச ஒழிப்பு பிரிவிடமிருந்து தாங்கள் கோரியதாக அஸாம் பாக்கி இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →