Oct 18, 2026
Thisaigal NewsYouTube

மூன்று லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்து, மூவர் காயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மூன்று லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்து, மூவர் காயம்

ஹுலு சிலாங்கூர், செப்டம்பர் 14-

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 420.2 ஆவது கிலோ மீட்டரில் உலு சிலாங்கூர் அருகில் ஒரு லோரி மற்றும் இரண்டு டிரெய்லர் லோரிகள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூன்று ஓட்டுநர்கள் காயமுற்றனர்.

இவ்விபத்து குறித்து காலை 7.05 மணியளவில் ஓர் அவசர அழைப்பை தாங்கள் பெற்றதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் முகமட் அஸ்ரி யூனுஸ் தெரிவித்தார்.

ஜோகூர்பாருவில் பொருட்களை இறக்குவதற்காக தெற்கே நோக்கி 57 வயது ஓட்டுநர் செலுத்திய டிரெய்லர் லோரியின் பின்புறம் மற்றொரு டிரெய்லர் லோரி மோதியதாக முகமட் அஸ்ரி குறிப்பிட்டார்.

இதில் அந்த டிரெய்லர் லோரியை பின்தொடர்ந்து வந்த மற்றொரு லோரி, வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிரே விபத்துக்குள்ளான டிரெய்லர் லோரியை மோதியது. இவ்விபத்தில் மூன்று லோரிகளின் ஓட்டுநர்களும் படுகாயம் அடைந்ததாக அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →