கோத்தா கினபாலு, நவம்பர்.18-
1963 மலேசிய உடன்படிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ள சபாவின் 40 விழுக்காடு நிகர வருமானக் கோரிக்கையை அமல்படுத்துவதற்கான செயல்திட்டம் தொடர்பான பூர்வாங்க பேச்சுவார்த்தை தொடங்கி விட்டதாக சபா முதலமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹஜிஜி நோர் தெரிவித்தார்.
கோத்தா கினபாலு, சபா மாநில நிர்வாக மையத்தில் மெனாரா கோத்தா கினபாலுவில் சபா மாநில அரசாங்க தலைமைச் செயலாளருக்கும் மலேசிய கரூவூல தலைவருக்கும் இடையில் இந்த பேச்சுகவார்த்தை நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
சபா மாநிலத்திற்குச் சேர வேண்டிய 40 விழுக்காட்டுத் தொகையைச் செலுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கு இந்த பூர்வாங்க சந்திப்புக்குக் கூட்டம் நடைபெற்றதாக ஹஜிஜி நோர் குறிப்பிட்டார்.








