Jun 30, 2026
Thisaigal NewsYouTube
பிளஸ் நெடுஞ்சாலை விபத்தில் ஆடவர் கருகி மாண்டார்
தற்போதைய செய்திகள்

பிளஸ் நெடுஞ்சாலை விபத்தில் ஆடவர் கருகி மாண்டார்

Share:

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் தெற்கு நோக்கிச் பாதையில்,193.8 ஆவது கிலோமீட்டரில் இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் ஆடவர் ஒருவர் தீயில் கருகி மாண்டார்.

டிரெய்லர் ஒன்று அவ்வாடவர் பயணித்த நான்கு சக்கர வாகனத்துடன் மோதியதில் தீ பரவி அத்துயரச் சம்பவம் ஏற்பட்டதாக மலாக்கா மாநில தீயணைப்பு, மீட்புத் துறையின் மக்கள் தொடர்பு அதிகாரி ஹாபிசத்துல்லாஹ் ரஷீத் தெரிவித்தார்.

அவ்விபத்து குறித்து அதிகாலை 2.15 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததை அடுத்து, ஆயர் குரோ மற்றும் ஜாசின் பெஸ்தாரி தீயணைப்பு நிலையங்களிலிருந்து இருபது தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.

சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள், நான்கு சக்கர வாகனத்திற்குள் ஒருவர் சிக்கியிருந்ததையும், மற்றொருவரான 54 வயது டிரெய்லர் ஓட்டுநர் பாதுகாப்பாகத் தப்பியிருந்ததையும் கண்டதாக ஹாபிசத்துல்லாஹ் கூறினார்.

தீயில் கருகி பலியான ஆடவரின் சடலம் மீட்கப்பட்டு பின்னர் மேல் நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு