கோலாலம்பூர், நவம்பர்.06-
கோலாலம்பூர் பூமலையில் வீற்றிருக்கும் தேசிய நினைவுச் சின்னத்தின் இராணுவ வீரர்கள் சிலைகள், சீரமைக்கப்பட வேண்டும் என்று பெரிக்காத்தான் நேஷனலின் சபா பெர்ணாம் எம்.பி. கலாம் சலான் இன்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.
மக்களவையில் உரையாற்றிய கலாம் சலான் தேசிய நினைவுச் சின்னத்தில் கொடியைத் தாங்கி நிற்கும் வீரர்களின் சிலைகள், நாட்டிற்காக போராடிய உள்ளூர் வீரர்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.
இராணுவ வீரர்களின் தோற்றம் ஐரோப்யிர்களைப் போல் உள்ளது. மலேசிய வீரர்களின் தோற்றத்தை அவை பிரதிபலிக்கவில்லை. ஒவ்வொரு வீரரும் மிக உயரமாக இருக்கின்றனர் என்று அந்த எதிர்க்கட்சி எம்.பி. தெரிவித்தார்.
1966 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்ட தேசிய நினைவுச் சின்னத்தில் சிலைகளில் உருமாற்றம் செய்யப்பட வேண்டும். மலேசியர்களின் தோற்றம் பிரதிபலிக்கப்பட வேண்டும் என்று கலாம் சலான் வலியுறுத்தினார்.








