Jun 30, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்
தற்போதைய செய்திகள்

சபாவில் தந்தையின் கண் முன்னே மகனை இழுத்துச் சென்ற முதலை - தேடும் பணிகள் தீவிரம்

Share:

சபா மாநிலம், கினாபாடாங்கான் பகுதியில் உள்ள கம்பங் செகாலியுட் அருகே, ஆற்றில் வலை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்த இளைஞர் ஒருவரை, முதலை தாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

28 வயதான ராயன் அப்துல்லா நேற்று இரவு இறால் பிடிக்க, ஆற்றில் வலை வீசிக்கொண்டிருந்த போது, அவரை முதலை தாக்கியதாக கினாபாடாங்கான் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைத் தலைவர் ஹைரி ஓது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த அவரது தந்தை, தனது மகன் முதலையிடம் சிக்கிக் கொண்ட காட்சியை நேரில் பார்த்துக் கதறியுள்ளார்.

நேற்று இரவு 9.10 மணி தொடங்கி தற்போது வரை, ராயன் அப்துல்லாவைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் ஹைரி ஓது குறிப்பிட்டுள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு