Mar 18, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

Share:

ஜோகூர் மாநிலம் தாமான் மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் 1 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட மதிப்பிலான மெத்தாம்பேட்டமைன் வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

உளவுத்துறை வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையின் போது, 36 வயதுடைய சந்தேக நபர், கடந்த சனிக்கிழமை மாலை 7.40 மணியளவில், கைது செய்யப்பட்டதாக, ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ அப் ரஹ்மான் அர்சாத் தெரிவித்துள்ளார்.

இச்சோதனையின் போது, வீடு ஒன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எம்பிவி வாகனத்தில், 21 பொதிகள் போதைப் பொருட்கள் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், மொத்தம் 20.2 கிலோ எடையுடையது என்றும், அதன் மதிப்பு சுமார் 1.01 மில்லியன் ரிங்கிட் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபர், அந்த வட்டாரத்தில் அதனை விநியோகம் செய்யும் முகவராகச் செயல்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News