Jun 30, 2026
Thisaigal NewsYouTube
வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன
தற்போதைய செய்திகள்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

Share:

கடுமையான விசா கட்டுப்பாடுகள் காரணமாக, வங்காள தேசத்தைச் சேர்ந்த நோயாளிகள், இந்தியாவிற்கு சிகிச்சைக்காக செல்ல முடியாத நிலையில், அவர்களை மலேசியாவிற்கு மருத்துவ சுற்றுலாப் பயணிகளாக அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

2026-ஆம் ஆண்டிற்கான, “மலேசிய மருத்துவ சுற்றுலா” முயற்சியின் கீழ், மலேசியாவை உலகளாவிய மருத்துவ சுற்றுலா மையமாக உருவாக்கும் நோக்கில், மலேசியா, வங்காள தேசத்துடனான தொடர்புகளை வலுப்படுத்தி வருகின்றது.

பல ஆண்டுகளாக, வங்காள தேச நோயாளிகள், அருகாமை நாடு மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட பரிந்துரை அமைப்புகள் காரணமாக, சிகிச்சைக்காக இந்தியாவை முதன்மையாகத் தேர்வு செய்து வந்தனர்.

ஆனால், சமீபத்தில் விசா விதிமுறைகள் கடுமையடைந்ததால், பல நோயாளிகளும் மருத்துவ ஒருங்கிணைப்பாளர்களும் மாற்று நாடுகளை ஆராயத் தொடங்கியுள்ளனர் என்று மலேசிய சுகாதாரப் பயண மன்றமான MHTC தெரிவித்துள்ளது.

அதன் படி, வங்காள தேச நோயாளிகளுக்கு மலேசியாவில் சிகிச்சையளிப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆராயப்பட்டு வருகின்றன.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு