Jun 30, 2026
Thisaigal NewsYouTube
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொழிலாளியின் தண்டனை இரத்து: 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை
தற்போதைய செய்திகள்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தொழிலாளியின் தண்டனை இரத்து: 8 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை

Share:

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில், கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் சிறைத் தண்டனை அனுபவித்து வந்த 43 வயதான காருக்கு வர்ணம் பூசும் தொழிலாளி ஒருவரின் தண்டனையை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

இதனையடுத்து, ஹரி ராயா பண்டிகைக்காக மலாக்காவிற்கு திரும்ப உள்ளார்.

நீதிபதிகள் அஸ்மி அரிஃபின், ராட்ஸி அப்துல் ஹமித் மற்றும் அகமது ஷாஹ்ரிர் சல்லே ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமர்வு, ஷாஃபி ஜைனா என்ற அந்நபரின் மேல் முறையீட்டை ஒருமனதாக ஏற்று, 36.376 கிலோ மெத்தாம்பேட்டமைன் போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டிலிருந்து அவரை விடுதலை செய்தது.

முன்னதாக இவ்வழக்கில், உயர் நீதிமன்றம் அவரை குற்றவாளி என தீர்ப்பளித்து, 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15 பிரம்படிகளும் விதித்துத் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு