Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் பெரும் காட்டுத் தீ: 60 ஏக்கர் நிலப்பரப்பு நாசம்- தீயணைப்பு வீரர்கள் போராட்டம்
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் பெரும் காட்டுத் தீ: 60 ஏக்கர் நிலப்பரப்பு நாசம்- தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

Share:

ரவாங், ஆகஸ்ட்.03-

சிலாங்கூர், ஃபெல்டா சுங்கை புவாயா அருகே ஜாலான் கியாம்பாங் சாரி 1 பகுதியில் நேற்று மாலை ஏற்பட்ட பெரும் காட்டுத் தீ, சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பை நாசம் செய்துள்ளது. நேற்று மாலை 6.36 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததும், புக்கிட் செந்தோசா, ரவாங் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.

இன்று காலை 7 மணி நிலவரப்படி 23.47 ஹெக்டரில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 0.80 ஹெக்டர் பரப்பளவில் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக மலேசிய தீயணைப்பு, மீட்புத் துறை தெரிவித்துள்ளது.

Related News