Jul 31, 2026
Thisaigal NewsYouTube
அமைச்சரவை மாற்றம், அரசாங்க கொள்கையில் மாற்றம் இல்லை
தற்போதைய செய்திகள்

அமைச்சரவை மாற்றம், அரசாங்க கொள்கையில் மாற்றம் இல்லை

Share:

அமைச்சரவை மாற்றத்தினால் அரசாங்கத்தின் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என பொருள்படாது என்று துணைப்பிரதமர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து 2023 ஆண்டுக்கான புறநகர் தொழில்முனைவர்கள் விழாவில், புறநகர் வட்டார மேம்பாட்டு அமைச்சர் மற்றும் துணைப்பிரதமரான அஹ்மாட் சாஹிட் ஹமிடி கூறினார்.

அமைச்சர்களில் மாற்றம் ஏற்பட்டாலும் அரசாங்கம் அல்லது தலைமை மாற்றங்கள் பயனுள்ள கொள்கைகளை மட்டுமே பாதுகாக்கும் என்று துணைப்பிரதமர் அஹ்மாட் சாஹிட் வலியுறுத்தினார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை மறுசீரமைப்பு தற்போதைய கோரிக்கைகளுக்கும் தேவைகளுக்கும் ஏற்றவாறு அமைச்சரவையை வலுப்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்பட்டவையாகும் என்றார் துணைப்பிரதமர் அஹ்மாட் சாஹிட்.

Related News