May 5, 2026
Thisaigal NewsYouTube
பொருளாதார வளர்ச்சி இலக்கை மிஞ்சினாலும் மெத்தனமாக இருக்கக்கூடாது: பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்
தற்போதைய செய்திகள்

பொருளாதார வளர்ச்சி இலக்கை மிஞ்சினாலும் மெத்தனமாக இருக்கக்கூடாது: பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.13-

மலேசியாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள போதிலும், நாம் மெத்தனமாக இருக்க வேண்டிய நேரமிதுவல்ல என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நான்காவது காலாண்டில் பொருளாதாரம் 6.3 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த ஆண்டு வளர்ச்சி 5.2 சதவீதத்தை எட்டியுள்ளது. இது ஆரம்பக் கட்ட கணிப்புகளை விட அதிகமாகும். உள்நாட்டுத் தேவைகள் வலுவாக இருந்ததே இந்த வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று பிரதமர் விளக்கினார்.

நிதி அமைச்சருமான அன்வார் மேலும் கூறுகையில், "அரசாங்கம் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றத்தை அங்கீகரிக்கும் அதே வேளையில், உலகளாவிய சவால்கள் மற்றும் வர்த்தகப் பதற்றங்கள் தொடர்ந்து நீடிப்பதால் நாம் ஓய்வெடுக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

எனவே, கொள்கை ரீதியிலான ஒழுக்கத்தைக் குறைத்துக் கொள்ளாமல், இன்னும் ஆழமான சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என அன்வார் வலியுறுத்தியுள்ளார்.

Related News