பட்டர்வெர்த், அக்டோபர்.17-
கடந்த வாரம் அம்பாங் ஜாஜார் பகுதியில் சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட காப்பீட்டு முகவர் லீ பூன் ஹான் கொலை வழக்கில் மூன்று நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அந்த மூன்று பேரில் ஒருவர், லீ பூனின் சடலத்தையும், அவரது காரையும் கண்டறிந்து காவல்துறையிடம் தகவல் கொடுத்தவர் என்று பினாங்கு காவல்துறைத் தலைவர் டத்தோ அஸிஸீ இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில், இக்கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டறியும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 8-ஆம் தேதி, லீ பூன் காணாமல் போவதற்கு முன்பு, ஒரு வங்கிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் போலீசார் விசாரித்து வருவதாகவும் அஸிஸீ இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.








