Jul 1, 2026
Thisaigal NewsYouTube
தந்தையின் உடலுடன் சொகுசு காரைப் புதைத்த குடும்பம்
தற்போதைய செய்திகள்

தந்தையின் உடலுடன் சொகுசு காரைப் புதைத்த குடும்பம்

Share:

மறைந்த தந்தையின் உடலுடன் ஒரு மெர்சிடிஸ் பென்ஸ் காரையும் சேர்த்து அடக்கம் செய்த சீனாவின்- பெய்ஜிங் நகரில் நடைபெற்ற இந்த விசித்திரமான சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சுமார் 1.1 மில்லியன் யுவான் அதாவது 6 லட்சத்து 40,000 ரிங்கிட், மதிப்புள்ள 'S450L' ரக காரில், '8888' என்ற சிறப்புப் பெயர் பலகையுடன் தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. சொகுசு கார்களைச் சேகரிப்பதில் ஆர்வம் கொண்ட தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றக் குடும்பத்தினர் இத்தகைய விசித்திரமான முடிவை எடுத்துள்ளனர்.

இந்த இறுதிச் சடங்கில் உதவிய கிராம மக்களுக்குத் தலா 500 யுவான் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இருப்பினும், ஒரு உண்மையான காரைப் புதைப்பது சுற்றுச்சூழல் விதிகளுக்குப் புறம்பானது என்பதால், உள்ளூர் நிர்வாகம் அந்தக் குடும்பத்திற்கு அபராதம் விதித்துள்ளது. மேலும், புதைக்கப்பட்ட காரைத் தோண்டி எடுத்து அந்த இடத்தைச் சீரமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்காக அந்தக் குடும்பத்தினர் தற்போது பொதுமன்னிப்பு கேட்டுள்ளனர்.

Related News

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

4 ஆயிரத்திற்கும்  மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தின - அமைச்சர் ரமணன் தகவல்

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

மின்படிக்கட்டில் சிறுநீர் கழித்த நபர்: போலீஸ் கடுமையான நடவடிக்கை எடுக்க இணையவாசிகள் கோரிக்கை

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி

2018 முதல் தொடரும் களப்பணி; ஸ்கூடாய் மக்களின் பேராதரவோடு களம் காணும் ஜசெக வேட்பாளர் கார்த்தியாயினி