ஜோகூர் பாரு, அக்டோபர்.29-
ஜோகூரில் 1.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பில், 10 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள்களுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை, தம்போய் பகுதியில் நடத்தப்பட்ட போதைப் பொருள் துடைத்தொழிப்பு நடவடிக்கையின் போது, அம்மூவரும் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் பல்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
27 வயது முதல் 42 வயதுடைய அந்நபர்களிடமிருந்து 35,580 பேரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாக்கும் அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், அவர்கள் மூவரும் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பதும் உறுதிச் செய்யப்பட்டுள்ளதாகவும் பல்வீர் சிங் தெரிவித்துள்ளார்.








