Jul 30, 2026
Thisaigal NewsYouTube
தூக்கிலிருந்து தப்பினார் வங்கி பாதுகாவலர்
தற்போதைய செய்திகள்

தூக்கிலிருந்து தப்பினார் வங்கி பாதுகாவலர்

Share:

ஜொகூர், ஜூலை 15-

வங்கியின் பெண் அதிகாரியை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட வங்கி பாதுகாவலர் ஒருவர், இன்று தூக்குத் தண்டனையிலிருந்து தப்பினார்.

ஓர் இந்தோனேசியரான லா ஓடே ஆர்டி ரசிலா என்ற 47 வயதுடைய அந்த பாதுகாவலருக்கு தூக்குத் தண்டனைக்கு பதிலாக 38 ஆண்டு சிறையும், 12 பிரம்படித் தண்டனையையும் கூட்டரசு நீதிமன்றம் விதித்தது.

இன்று ஜோகூர்பாருவில் கூடிய நாட்டின் தலைமை நீதிபதிதுன் தேங்கு மைமுன் துவான் மாட் தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள், அந்த வங்கி பாதுகாவலருக்கு எதிரான குற்றத்தை உறுதிப்படுத்தினர்.

கடந்த 2013 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி சுபாங் ஜெயா யுஎஸ்ஜே சென்ட்ரல், ஜாலான் சென்ட்ரா 2 - இல் உள்ள AmBank- கட்டடத்தில் 37 வயதுடைய வங்கி பெண் அதிகாரி நோராசிதா அபு தாலிப்- என்பவரை சுட்டுக்கொன்றப் பின்னர் வங்கியிலிருந்து 5 லட்சம் வெள்ளி ரொக்கத்தை கொள்ளையிட்டதாக லா ஓடே ஆர்டி ரசிலா குற்றஞ்சாட்டப்பட்டார்.

அந்த நபர், மலேசியப் பிரஜையின் போலி அடையாள கார்ட்டை பயன்படுத்தி, அந்த வங்கியில் பாதுகாவலராக வேலை செய்து வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்