Sep 22, 2026
Thisaigal NewsYouTube
இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

Share:

நாட்டில் இன்று முதல் ஆர்ஓஎன்97 பெட்ரோல், மானியமில்லாத ஆர்ஓஎன்95 பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை லிட்டருக்கு 20 காசுகள் உயர்த்தப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

ஆர்ஓஎன்97 பெட்ரோல், லிட்டருக்கு RM4.20 இலிருந்து RM4.40 ஆக உயர்கிறது. மானியமில்லாத ஆர்ஓஎன்95: லிட்டருக்கு RM3.62 இலிருந்து RM3.82 ஆக உயர்கிறது. மானியமில்லாத டீசல்: லிட்டருக்கு RM4.42 இலிருந்து RM4.62 ஆக உயர்கிறது.

எனினும் புடி95 திட்டத்தின் கீழ் உள்ள ஆர்ஓஎன்95 பெட்ரோல் விலை தொடர்ந்து லிட்டருக்கு RM1.99 ஆகவும், புடி டீசல் திட்டத்தின் கீழ் உள்ள டீசல் விலை லிட்டருக்கு RM2.10 ஆகவும் எவ்வித மாற்றமுமின்றி நீடிக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related News

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீச... | Thisaigal News