Sep 23, 2026
Thisaigal NewsYouTube
5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்
தற்போதைய செய்திகள்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்

Share:

நாட்டில் தங்கியிருக்கும் 5,000 ரோஹிங்யா அகதிகளை மீண்டும் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் செல்ல மியான்மர் ஒப்புக்கொண்டுள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற சுமுகமான தூதரகப் பேச்சுவார்த்தை காரணமாக இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இன்று சென்னா பகுதியில் வாக்காளர்களைச் சந்தித்தபோது பிரதமர் இதனை தெரிவித்தார். மலேசியாவைத் தவிர, வங்காளதேசத்திலிருந்து 3 லட்சம் ரோஹிங்யா அகதிகளையும் திரும்பப் பெற மியான்மர் சம்மதித்துள்ளது.

மலேசியாவில் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிங்யா அகதிகள் மீது போலீஸ் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனப் பிரதமர் எச்சரித்துள்ளார்.

Related News