Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர் 12 ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பெர்சத்து கட்சியின் முக்கியத் தலைவர் 12 ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.20-

பெர்சத்து கட்சியின் சிகாம்புட் தொகுதியின் துணைத் தலைவர் அடாம் ரட்லான் அடாம் முகமட், 4.1 மில்லியன் ரிங்கிட் அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் அவருக்கு எதிரான 12 ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளிலிருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.

அரசு தரப்பு வழக்கறிஞர்களான ஃபாரா யாஸ்மின் சாலே, ஃபாட்லி ஸம்ரி மற்றும் அடாம் ரட்லான் வழக்கறிஞர் ராஜன் நவரத்னம் ஆகியோரின் வாதங்களைச் செவிமடுத்தப் பின்னர் நீதிபதி சுஸானா ஹுசேன் தமது தீர்ப்பை வழங்கினார்.

சட்டத்துறை அலுவலகத்தில் அடாம் ரட்லான் சமர்ப்பித்த பிரதிநிதித்துவ மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு இருப்பதாக நீதிமன்றத்தில் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ஃபாரா யாஸ்மின் தெரிவித்தார்.

குறிப்பாக 2001 ஆம் ஆண்டு பணமோசடி, பயங்கரவாத எதிர்ப்பு நிதி உதவி மற்றும் சட்டவிரோதப் பணமாற்றம் சட்டத்தின் கீழ் தனக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை அடாம் ரட்லான் செலுத்த முன்வந்து இருப்பதாக ஃபாரா யாஸ்மின் விளக்கினார்.

Related News