Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஜாலான் பத்தாங் காலி – கெந்திங் சாலை திறக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

ஜாலான் பத்தாங் காலி – கெந்திங் சாலை திறக்கப்பட்டது

Share:

ஹுலு சிலாங்கூர், ஜூலை 1-

31 பேர் உயிருடன் புதையுண்ட ஜாலான் படாங் காளி நிலச்சரிவு சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டு காலமாக மூடப்பட்டு இருந்த ஜாலான் படாங் காளி –கெந்திங் சாலையின் B66 ஆவது வழித்தடம், இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டது. இதனை உலு சிலாங்கூர் பொதுப்பணி இலாகா தனது முகநூலில் அறிவித்துள்ளது.

இன்று 3 மணிக்கு பிறகு அனைத்து வகையான வாகனங்களும் அந்த சாலையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜாலான் படாங் காளி –கெந்திங் சாலையில் நிகழ்ந்த நிலச்சரிவு சம்பவத்தில் அங்குள்ள Father's Organic Farm என்ற இடத்தில் முகாமிட்டு இருந்த 92 பேரில் 31 பேர் உயிரிழந்த வேளையில் 61 பேர் உயிரித் தப்பினர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பகுதியினர் கோலாலம்பூர், ஜாலான் ஈப்போ, 5 ஆவது மைல்,ஜாலான் பத்து, முன் ச்ஹோங் சீனப்பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆவார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்