Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு
தற்போதைய செய்திகள்

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

Share:

1.25 பில்லியன் ரிங்கிட் சோலார் ஹைப்ரிட் திட்ட ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி ரோஸ்மா மன்சூர் தாக்கல் செய்த மனுவை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் மனைவியான ரோஸ்மா மன்சூர், தனது முந்தைய தீர்ப்பில் பக்கச்சார்பு நிலவியதாகக் கூறி இந்த மறுவிசாரணை மனுவைத் தாக்கல் செய்திருந்தார். எனினும், வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கான எந்தவொரு சிறப்பு காரணமும் இல்லை என்று நீதிபதி அசிசா நவாவி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஒருமனதாக அறிவித்தது.

இதன் மூலம், ரோஸ்மாவுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 970 மில்லியன் ரிங்கிட் அபராதத்திற்கு எதிராக அவர் செய்துள்ள முதன்மை மேல்முறையீட்டு மனுவை, வரும் செப்டம்பர் மாதம் நீதிமன்றம் விசாரிக்கவுள்ளது.

Related News