Sep 15, 2026
Thisaigal NewsYouTube
  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு
தற்போதைய செய்திகள்

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

Share:

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 5 வார சிறைத்தண்டனை தீர்ப்பை மதிப்பதாகவும், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய தனது வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சபா, வாரிசான் கட்சித் தலைவர் ஷாஃபி அப்டால் தெரிவித்துள்ளார்.

சிறுமி ஜாரா கைரினா மஹாதிர் மரணம் தொடர்பான மரண விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, அது குறித்துப் பேசியதற்காக முன்னாள் சபா முதலமைச்சரான ஷாஃபி அப்டால் மீது இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து சபா, பாப்பார் செஷன்ஸ் நீதிமன்றம் இத்தண்டனையை இன்று விதித்தது.

எனினும், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வரை இந்த சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மக்கள் பிரதிநிதியாக தனது கடமைகளைத் தொடர்ந்து செய்யப்போவதாக ஷாஃபி அப்டால் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறை... | Thisaigal News