சபா மாநிலம் செம்போர்னா பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி அறைக்குள் புகுந்து 25 வயது சீனப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 18 வயது உள்ளூர் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஜாலான் காமிரி பகுதியில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது அறையில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த அப்பெண்ணை, சந்தேக நபர், பாலியல் தூண்டலோடு ஆடையின் ஒரு பகுதியை அகற்றியதாகவும், இதனையடுத்து ஏற்பட்ட போராட்டத்தில் அப்பெண் தப்பிச் சென்று அருகிலுள்ள புதர்களில் மறைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய செம்போர்னா குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார், அதே நாள் இரவு 8 மணியளவில், சம்பந்தப்பட்ட சுற்றுலா விடுதியில் இருந்த அந்த இளைஞரைக் கைது செய்துள்ளனர்.








