கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், முனையம் 1-ல் பயணிகளை தொந்தரவு செய்து, ஆக்ரோஷமாக நடந்து கொண்ட வங்காளதேச சேர்ந்த ஆடவர் மனநலப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கேஎல்ஐஏ மாவட்ட போலீஸ் தலைவர் எம்.ரவி தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மாலை 4.40 மணியளவில் விமான நிறுவனத்தின் முகப்பு அருகே அந்த நபர் சத்தமாகக் கூச்சலிட்டு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், நிலைமையை கட்டுப்படுத்த வந்த விமான நிலைய பாதுகாப்புப் பணியாளர்கள் அவரை முனையம் 1 போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் அவரை அமைதிப்படுத்தும் முயற்சியின் போதும் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல் தொடர்ந்து ஆக்ரோஷமாக நடந்து கொண்டதால், காஜாங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மனநலப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாகவும் எம்.ரவி குறிப்பிட்டுள்ளார்.








