கோலாலம்பூர் மற்றும் அம்பாங் பகுதிகளில் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 2 கார்களில் சிக்கியிருந்த 3 பேரை தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
அம்பாங், ஜாலான் மெங்குடு பகுதியில் சுமார் ஒரு மீட்டர் உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கியிருந்த நிலையில், காரில் ஒருவர் சிக்கியிருந்தார்.
மேலும், தாமான் யு-தாண்ட் பகுதியில் டேசா அங்காசா அடுக்குமாடிக் குடியிருப்பு அருகே சுமார் 60 சென்டிமீட்டர் ஆழமுள்ள வெள்ளநீரில் பிஎம்டபள்யு கார் ஒன்றில் சிக்கியிருந்த 2 பேரும் மீட்கப்பட்டனர்.
அதேவேளையில், அம்பாங்கின் யுகேய் பெர்டானா ஹைட்ஸ் பகுதியில் வெள்ளம் சூழ்ந்த வீடு ஒன்றில், வெள்ள நீரில் மின்சாரம் பாய்ந்திருக்கலாம் என குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவித்த நிலையிலும், மீட்புப் படையினர் அங்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
எனினும், இந்த சம்பவங்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை தெரிவித்துள்ளது.








