Aug 13, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

Share:

அனைத்துலக பார்முலா 1 பந்தயக் கால அட்டவணையில் மீண்டும் நிரந்தர இடத்தைப் பெற வேண்டுமெனில், மலேசியா ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 300 மில்லியன் ரிங்கிட் செலவிட வேண்டும் என்று செப்பாங் அனைத்துலக சுற்றுவட்டாரத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அழான் ஷாஃப்ரிமான் ஹனிஃப் தெரிவித்துள்ளார். உரிமைக் கட்டணம் மற்றும் உள்ளூர் தயாரிப்புச் செலவுகள் அடங்கிய இந்தத் தொகையைச் செலவிடுவதன் மூலம், நாட்டின் சாத்தியமான வருமானம் 1 பில்லியன் ரிங்கிட்டை எட்டக்கூடும் என்றார் அவர்.

பணவசதியும் கால அட்டவணையில் காலியிடமும் இருந்தால் மட்டுமே மலேசியா மீண்டும் பார்முலா 1-ல் இடம்பிடிக்க முடியும் என்றார் அவர். எனினும், மக்களின் பொருளாதாரப் பிரச்சினைக்கு அரசாங்கம் தற்போது முன்னுரிமை அளித்து வருவதால், எதிர்காலத் தரவுகளின் அடிப்படையில் மட்டுமே இது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்றார்.

வரும் அக்டோபர் 2 முதல் 4 வரை மலேசியாவில் நடைபெறவுள்ள 'கூல்ப் ஏர் பக்ரைன் கிராண்ட் பிரீ' ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் பந்தயமாகும் என்று அவர் குறிப்பிட்டார். மலேசியா இதற்கு முன்பு 1999 முதல் 2017 வரை செப்பாங்கில் மலேசிய கிராண்ட் பிரீ போட்டிகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related News

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய அனிமேஷன் முயற்சி

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது