Sep 23, 2026
Thisaigal NewsYouTube
தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை
தற்போதைய செய்திகள்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட 150 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கில், துன் டாக்டர் மகாதீர் முகமதின் உடல்நிலை குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

வழக்கு விசாரணைக்கு அவர் முழுத் தகுதியுடன் இருக்கிறாரா என்பது குறித்த விவரங்களை, ஷா ஆலாம் உயர் நீதிமன்றத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்யவுள்ள வழக்கறிஞர்கள், தேசிய இருதயக் கழகத்தின் மருத்துவக் கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை குறித்து மருத்துவ நிபுணர்களின் அறிக்கையையும் சமர்ப்பிக்கவுள்ளனர்.

கடந்த ஜூலை 10ஆம் திகதி தனது 101-வது பிறந்தநாளைக் கொண்டாடிய முன்னாள் பிரதமரின் வயது மற்றும் மருத்துவச் சூழலைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமது 22 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் குடும்பத்தினரைச் செல்வச் செழிப்பாக்கியதாகவும், இனவாதியாகச் செயல்பட்டதாகவும் கூறி பிரதமர் அன்வார் இப்ராஹிம் தம்மைக் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி டாக்டர் மகாதீர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

Related News