Aug 13, 2026
Thisaigal NewsYouTube
18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

Share:

ஜொகூர் பாருவில் உள்ள வாடிக்கையாளர் சேவை அதிகாரியான 40 வயதுடைய ஜி. தேவேந்திரன் என்பவர், தனது 18 மாத ஆண் குழந்தையைக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் இன்று ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட வழக்கு என்பதால் அவரிடமிருந்து எந்த வாக்குமூமும் பதிவு செய்யப்படவில்லை. கடந்த 2023 செப்டம்பர் 12 அன்று பந்தர் பாரு பெர்மாஸ் ஜெயாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கான மரண தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் குறைந்தபட்சம் 12 பிரம்படிகளும் வழங்கக்கூடிய குற்றவியல் சட்டம் 302-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாத நிலையில், டிஎன்ஏ மற்றும் தடயவியல் சோதனைகளின் அறிக்கைகளைச் சமர்ப்பிக்க இவ்வழக்கை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த குழந்தையின் மரணம், கடந்த ஜூலை 18 அன்று தந்தையான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி