Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!
தற்போதைய செய்திகள்

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

Share:

மலேசிய ஆன்மீக வர்த்தக உலகையே தன் பக்கம் திருப்பியிருக்கிறது சிலாங்கூர், புஞ்சாக் ஆலாம்மில் அரங்கேறிய "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

மனிதர்களின் வாழ்வியலை மாற்றியமைக்கும் அசல் படிகங்கள் மற்றும் பிரத்தியேக ஆன்மீகப் பொருட்களின் சங்கமமாகத் திகழும் இந்த நிறுவனத்தின் தொடக்கவிழா, உள்ளூர் மக்களிடையே மிகப்பெரிய அலையை ஏற்படுத்தியது.

லாட் எண். 44262, ஜாலான் தியாஜ் 2/1, புசாத் பெர்தாகாங்கன் ஆலாம் ஜயா - பந்தர் புஞ்சாக் ஆலாம் என்ற முகவரில் கடந்த ஜூலை 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:11 மணியளவில் திருஅண்ணாமலை – சிவன் ஆலயத்தில், நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டர் குரு, டனேஸ் சந்திரசேகரன் குடும்பத்தினர் பக்திப் பெருக்குடன் மங்களகரமான சிறப்பு வழிபாட்டுடன் விழா களைக்கட்டியது.

அதனைத் தொடர்ந்து, பந்தர் புஞ்சாக் ஆலாம், வில் அமைந்திருக்கும் புதிய வளாகத்தில், விண்ணைத் தொட்ட அதிரடி தப்பாட்ட இசை முழக்கத்துடன் விழா முத்தாய்ப்பாகத் தொடங்கியது! மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் தலையில் தீச்சட்டி ஏந்திய சிலிர்க்க வைக்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் அப்பகுதியையே அதிர வைத்தன!

இந்நிகழ்விற்குச் சிறப்புப் பிரமுகராக ஆன்மீகக் குரு சத்குரு ஸ்ரீ ஜெயபிரகாசேந்திர சரஸ்வதி மகாசுவாமிகள் நேரில் வருகை தந்து தெய்வீக ஆசி வழங்கினார். வந்திருந்த சிறப்புப் பிரமுகர்களுக்கு மாலை அணிவித்து, பிரம்மாண்டமாகப் பொன்னாடை போர்த்தி சிறப்பான முறையில் கௌரவிக்கப்பட்டது!

அசல் படிகங்கள் மூலம் நேர்மறை ஆற்றலை வாரி வழங்கும் இந்த அசாத்திய வணிகப் புரட்சியின் பின்னணி குறித்தும், இதன் தொலைநோக்கு பார்வை குறித்தும் ஸ்ரீ மகா குபேரன் கிரிஸ்டல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டர் குரு, டனேஸ் சந்திரசேகரன் பகிர்ந்து கொண்டார்.

ஸ்ரீ மகா குபேரன் கிரிஸ்டல்ஸ் பிராண்டின் பிரத்தியேகச் சின்னத்தை உலக அரங்கிற்கு கொண்டு சேர்க்கும் நவ்யா ராமசாமி, இந்த படிகங்களின் அசாத்திய சக்திகள் குறித்து விவரித்தார்.

குபேரரின் அருளும் நேர்மறை அதிர்வுகளும் இனி அனைவரின் இல்லத்தையும் சென்றடையப் போகிறது! புஞ்சாக் ஆலாம் வட்டாரத்தில் புதிய மைல்கல் படைத்துள்ள "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" புதிய கிளை.

Related News

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்