Aug 7, 2026
Thisaigal NewsYouTube
ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!
தற்போதைய செய்திகள்

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

Share:

கடந்த வாரம் 14 வயது இரண்டு பள்ளி மாணவிகள் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கைவிடப்பட்ட 15 மாடிகளைக் கொண்ட ஈப்போ, சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிக்கப்பட்டு மறுமேம்பாடு செய்யப்படவுள்ளது.

பேராக் வீட்டுவசதி மற்றும் சொத்து வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சைட்டீனா வான் நாசிர் இத்தகவலைத் தெரிவித்தார். இந்த நிலம், வாரியத்திற்குச் சொந்தமானது என்றும், அங்குள்ள இரண்டு பாரம்பரிய கட்டிடங்களைத் தவிர்த்து 15 மாடி கட்டிடம் உட்பட மற்ற பகுதிகள் இடிக்கப்பட்டு புதிய மேம்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் கூறினார். ஈப்போ மாநகர மன்றத்தின் திட்டமிடல் அனுமதி பெற்ற பிறகே இடிப்புப் பணிகள் தொடங்கும்.

பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாராணி மொகமது முன்னிலையில் பேசிய சைட்டீனா வான் நாசிர், பாதுகாப்பு வேலி அமைத்த பிறகே பணிகள் தொடங்கும் என்றும், அங்குள்ள ஒரு ஆலயத்தின் உரிமைப் பிரச்சனை தீர்க்கப்பட்ட பின் மறுமேம்பாடு முழுமையாகத் தொடங்கும் என்றும் குறிப்பிட்டார்.

1963-இல் கட்டப்பட்ட இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம், கட்டமைப்புப் பாதுகாப்பு காரணங்களால் 2012 ஆம் ஆண்டு முதல் படிப்படியாகக் காலியாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி