Jul 16, 2026
Thisaigal NewsYouTube
மலேசிய டாக்சிகளுக்கான சிங்கப்பூர் நுழைவுக் கட்டணம் 15 டாலராக உயர்வு
தற்போதைய செய்திகள்

மலேசிய டாக்சிகளுக்கான சிங்கப்பூர் நுழைவுக் கட்டணம் 15 டாலராக உயர்வு

Share:

வரும் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் மலேசியப் பதிவு பெற்ற டாக்சிகளுக்கு ஒவ்வொரு பயணத்திற்கும் 15 சிங்கப்பூர் டாலர் அல்லது சுமார் 48 ரிங்கிட் புதிய நுழைவுக் கட்டணமாக விதிக்கப்படும் என அந்நாட்டின் தரைமார்க்க போக்குவரத்து வாரியமான எல்டிஏ அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள மாதந்திர 2 சிங்கப்பூர் டாலர் கட்டணத்திற்கு மாற்றாக இது அமல்படுத்தப்படுகிறது.

இரு நாட்டு டாக்சிகளுக்கு இடையிலான இயக்கச் செலவு இடைவெளியைக் குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காப்புறுதி பாதுகாப்பு இல்லாத சட்டவிரோத வாகனப் போக்குவரத்து சேவைகளைப் பயணிகள் தவிர்க்க வேண்டும் என்றும், விதிமீறுவோர் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் தொடரும் என்றும் எல்டிஏ எச்சரித்துள்ளது.

Related News