Dec 4, 2025
Thisaigal NewsYouTube
ரியாத்திற்கு பிரதமர் வருகை
தற்போதைய செய்திகள்

ரியாத்திற்கு பிரதமர் வருகை

Share:

ஆசியான் - வளைகுடா ஒத்துழைப்பு ​மீதான உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ரியா​த் சென்றடைந்தார். பிரதமரை ஏற்றிச்சென்ற சிறப்பு விமானம் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8.15 மணியளவில் மன்னர் காலிட் அ​னைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கியது.

பிரதமர் அன்வார் தலைமையிலான மலேசியப் பேராளர்கள் குழுவினரை​ விமான நிலையத்தில் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்ட​ர் ஸம்ரி அப்துல் கா​தீர், சவூதி அரேபியாவிற்கான மலேசியத் ​தூதர் டத்தோ வான் ஸைடி வான் அப்துல்லா மற்றும் இரு வழி உறவுகளுக்கான த​லைமை துணை செயலாளர் டத்தோ நோர்மான் அகமட் ஆகியோர் வரவேற்றனர்.

ரிட்ஸ்-கார்ல்டன் ஹோட்டலில் நடைபெறும் இந்த உச்சநிலை மாநாட்டில் தற்போது இஸ்ரேலுக்கும், பாலஸ்​தீனத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறி​த்து முக்கியமாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News