காஜாங், ஜனவரி.03-
கிழக்கு கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச் சாலையான EKVE-இல் உள்ள சுங்கை லோங் டோல் சாவடியில், நேற்று வெள்ளிக்கிழமை, மரத்தால் ஆன பொருள் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு ஆக்ரோஷமாக நடந்து கொண்ட இரு ஆடவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து நேற்று இரவு 9 மணியளவில் தங்களுக்குப் புகார் கிடைத்ததாக காஜாங் போலீஸ் தலைவர் நாஸ்ரோன் அப்துல் யுசோஃப் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது நேற்று காலை 9 மணியளவில் நடந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஆடவர்களின் செயலால், போக்குவரத்தானது அப்பகுதியில் பாதிக்கப்பட்டதோடு, பொதுமக்களும் மிகுந்த அவதிக்குள்ளானதாக நாஸ்ரோன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் தெரியும் பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.








