Dec 15, 2025
Thisaigal NewsYouTube
ஆஸ்திரேலியாவில் நடந்த வன்முறைத் தாக்குதல்: அன்வார் கடும் கண்டனம்
தற்போதைய செய்திகள்

ஆஸ்திரேலியாவில் நடந்த வன்முறைத் தாக்குதல்: அன்வார் கடும் கண்டனம்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.15-

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரையில் நேற்று மர்ம நபர்கள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.

சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து உலகத் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இத்தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதம் அல்லது இனத்தின் பெயரால் அப்பாவி மக்களைக் குறி வைத்து மேற்கொள்ளப்படும் இது போன்ற தாக்குதல்களில், எந்த ஒரு நியாயமும் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அன்வார், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இந்தக் கடினமான சூழலில், ஆஸ்திரேலிய மக்களுடனும் அரசாங்கத்துடனும் மலேசியா துணை நிற்பதாகவும், குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அன்வார் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

மலாக்கா போலீஸ் தலைவர் வெளியிட்டது பொய்யான அறிக்கையாகும்: புதிய ஆதாரங்களுடன் வாதிட்டடார் அருண் துரைசாமி

மலாக்கா போலீஸ் தலைவர் வெளியிட்டது பொய்யான அறிக்கையாகும்: புதிய ஆதாரங்களுடன் வாதிட்டடார் அருண் துரைசாமி

மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் விடுப்பில் அனுப்பப்பட வேண்டும்

மலாக்கா மாநில போலீஸ் தலைவர் ஸுல்கைரி முக்தார் விடுப்பில் அனுப்பப்பட வேண்டும்

விபத்தில் இளைஞருக்கு மரணம் விளைவித்ததாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

விபத்தில் இளைஞருக்கு மரணம் விளைவித்ததாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

வர்த்தகர் ஆல்பெர்ட் தே துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டாரா? விசாரணையைத் தொடங்கியது போலீஸ் துறை

வர்த்தகர் ஆல்பெர்ட் தே துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டாரா? விசாரணையைத் தொடங்கியது போலீஸ் துறை

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: புக்கிட் அமான் சி.ஐ.டி. தலைவர் டத்தோ குமாரிடமிருந்து கைநழுவியதா?

மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: புக்கிட் அமான் சி.ஐ.டி. தலைவர் டத்தோ குமாரிடமிருந்து கைநழுவியதா?

 "சாலைத் தடுப்பான்கள் அலங்காரத்திற்காக அல்ல; பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக" - டிபிகேஎல் வலியுறுத்து

"சாலைத் தடுப்பான்கள் அலங்காரத்திற்காக அல்ல; பாதசாரிகளின் பாதுகாப்பிற்காக" - டிபிகேஎல் வலியுறுத்து