பட்டர்வொர்த், ஜூலை.16-
கார் ஒன்று சாலையை விட்டு விலகி, சீரமைப்பில் இருந்து வரும் ஒரு கட்டடத்தை மோதியதில் காரைச் செலுத்திய முதியவர் ஒருவர் காயமுற்றார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் பட்டர்வொர்த், ஜாலான் ஜெட்டி லாமாவில் நிகழ்ந்தது. சீரமைப்பில் இருந்து வரும் கட்டடத்தின் உபகரணங்கள் சரிந்து விழுந்ததில் காரின் இடிப்பாடுகளுக்கு இடையில் அதன் ஓட்டுநரான 77 வயது முதியவர் சிக்கிக் கொண்டதாக பினாங்கு மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் ஜோன் சகூன் தெரிவித்தார்.
பெரோடுவா கெனாரி காரின் இருக்கையில் சிக்கிக் கொண்ட அந்த முதியவர், பின்னர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.








