சட்டமன்ற தேர்தல் வாயிலாக நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுவது ஒரு மிரட்டல் அல்ல என்று பக்காத்தான் ஹராப்பான் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ சைப்புடின் நசுதியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம், நாட்டின் பொருளாதாரத்தை மீட்சிப் படுத்துவதிலும், மக்களின் நலன் சார்ந்த அம்சங்களிலும், தீவிர கவனம் செலுத்தி வருவதால், இது போன்ற மிரட்டல், ஓர் அச்சுறுத்தல் அல்ல என்று உள்துறை அமைச்சருமான சைப்புடின் நசுதியோன் விளக்கினார்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள், மத்திய அரசாங்கத்தை வழிநடத்தி வரும் ஒற்றுமை அரசாங்கத்திற்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும், 6 மாநிலங்களின் அரசுகளை எதிர்கட்சிகள் கைப்பற்றுவது மூலம், மத்திய அரசாங்கத்தை அசைத்துப் பார்க்க முடியும் என்று எதிர்கட்சிகள் மனப்பால் குடித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


