May 5, 2026
Thisaigal NewsYouTube
தாவாவில்  தீ விபத்து: 40 வீடுகள் சாம்பல்
தற்போதைய செய்திகள்

தாவாவில் தீ விபத்து: 40 வீடுகள் சாம்பல்

Share:

தாவாவ், பிப்ரவரி.02-

இன்று திங்கட்கிழமை காலை தாவாவ், தவாவூ, கம்பங் திதிங்கான் பகுதியில் உள்ள Kampung Titingan தேசியப் பள்ளிக்கு அருகே ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 வீடுகள் எரிந்து நாசமாகின.

சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தாவாவ் மண்டலத் தலைவர் Moilley Milin கூறுகையில், காலை 10:15 மணியளவில் தீ விபத்து குறித்த அழைப்பு வந்ததாகவும், 10:23 மணிக்கு மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றடைந்ததாகவும் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் திறந்த நீர் ஆதாரங்கள் மற்றும் தீயணைப்புத் துறையின் தண்ணீர் லாரிகளைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மதியம் 12:03 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதுவரை இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என உறுதிச் செய்யப்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related News

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

ரஃபிஸி ரம்லியிடம் 7 மணி நேரங்கள் தொடர் விசாரணை - நாளை மீண்டும் விசாரணை தொடரும்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் புதிய இயக்குநராக யுஸ்ரி ஹசான் பஸ்ரி நியமனம்

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

கூலிம் கிளப்பில் கைகலப்பு: பாடாங் செராய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆயுதத்துடன் மிரட்டிய குற்றத்திற்காகக் கைது!

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

அட்டர்னி ஜெனரல் - அரசு தரப்பு வழக்கறிஞர் பதவிகளை பிரிக்கும் மசோதா: மே 18-க்குள் முடிவு

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

மற்றவர்களின் மைகாட்களைப் பயன்படுத்திய வங்காள தேச நாட்டவருக்கு 10 ஆயிரம் ரிங்கிட் அபராதம்