Sep 28, 2026
Thisaigal NewsYouTube
துன் டாக்டர் ஹஸ்மா அலி நல்லடக்கம் – புசாரா நெகாராவில் அரசு மரியாதை
தற்போதைய செய்திகள்

துன் டாக்டர் ஹஸ்மா அலி நல்லடக்கம் – புசாரா நெகாராவில் அரசு மரியாதை

Share:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது அவர்களின் மனைவியான துன் டாக்டர் ஹஸ்மா அலி, புத்ராஜெயா பிரிசின்ட் 20-ல் உள்ள புசாரா நெகாராவில் இன்று மாலை சுமார் 6.40 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டார்.

அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில், அரசாங்கம் தீர்மானித்த இஸ்டியாடாட் பெங்கெபுமியான் பெம்பெசார் நெகாரா எனப்படும் அரசு அடக்கச் சடங்கு நடைபெற்றது.

மார்காஸ் தெந்தெரா டாராட்டைச் சேர்ந்த அஹ்மாட் சௌவ்ஃபி மாட் இசா தலைமையில் நடைபெற்ற இச்சடங்கில், ராணுவம் மற்றும் போலீசைச் சேர்ந்த எட்டு அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர், அரசாங்க அதிகாரபூர்வ நிகழ்வு மன்றத் தலைவர் அப்துல் ஷுகோர் மாஹ்மூட், தேசியக் கொடியை துன் டாக்டர் மகாதீர் முகமதுவிடம் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து, புத்ரா பள்ளிவாசலின் தலைமை இமாம் முஹமட் ஸகுவா ரோட்ஸாலி, தல்கீன் மற்றும் பிரார்த்தனையை நடத்தினார்.

முன்னதாக, துன் டாக்டர் ஹஸ்மா அலியின் உடல் ஶ்ரீ கெம்பாங்கானில் உள்ள மஸ்ஜிட் அஸ்-ஷாரிஃப் பள்ளிவாசலுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அஸர் தொழுகைக்குப் பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

இன்று காலை 9.20 மணியளவில் தேசிய இருதயக் கழகத்தில் 100 வயதில் காலமான துன் டாக்டர் ஹஸ்மா, 70 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் துன் டாக்டர் மகாதீருடன் ஏழு பிள்ளைகளைக் கொண்டுள்ளார்.

Related News