Aug 12, 2026
Thisaigal NewsYouTube
புருணை சுல்தானுக்காகச் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்வீர்
தற்போதைய செய்திகள்

புருணை சுல்தானுக்காகச் சிறப்புப் பிரார்த்தனை மேற்கொள்வீர்

Share:

குவாந்தான், மே.30-

கோலாலம்பூர் ஐஜேஎன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மேன்மை தங்கிய புருணை சுல்தான், சுல்தான் ஹாஸானால் போல்கியா உடல் நலமடைய பகாங் மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிவாசல்களிலும், சூராவ்களிலும் சிறப்புப் பிரார்த்தனை நடத்துமாறு பகாங் சுல்தான், சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

ஆசியான் மாநாட்டில் கலந்து கொண்ட போது, மிகுந்த, உடல் அசதிக்கு ஆளான புருணை சுல்தான் தற்போது தேசிய இருதய சிகிச்சைக் கழகமான ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புருணைத் தலைவரான சுல்தான் ஹாஸானால் போல்கியா, உடல் நலம் தேறி நலமுடன் மீண்டு வர சிறப்புப் பிரார்த்தனை நடத்துமாறு சுல்தான் அப்துல்லா கேட்டுக் கொண்டார்.

Related News