Dec 10, 2025
Thisaigal NewsYouTube
சரவாக் மாநிலத்தில் நாளை வரை கடுமையான தொடர் மழை - மெட்மலேசியா எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

சரவாக் மாநிலத்தில் நாளை வரை கடுமையான தொடர் மழை - மெட்மலேசியா எச்சரிக்கை

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.08-

சரவாக் மாநிலத்தில் பல பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை வரை கடுமையான அளவில், தொடர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூச்சிங், செரியா, சமரஹான், ஶ்ரீ அமான் மற்றும் பெதோங் ஆகிய பகுதிகளில் இந்த கடும் மழையானது பெய்யக்கூடும் என மெட்மலேசியாவின் தலைமை இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப் இன்று திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதே வேளையில், ஶ்ரீ அமான், சிபு, முகா உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர் மழை எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்கள், வானிலை மாற்றங்கள் குறித்த அறிவிப்புகளை மெட்மலேசியாவின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Related News